You are wel Come
   
 
  From My Heart

 


காதல் காயங்கள் ஆறாத வடுக்கலாய் உன் நினைவுகளுடன்...

நான் தோற்றப் போது
நீ வெற்றி அடைந்தாய்
நீ தோற்றப் போது
என் மனமும்
தோற்றுப் போனது.

 

நான் ஒரு தோல்வியை
புல வெற்றிகளாக்கினேன்
நீ-ஒரு வெற்றியை
பல தோல்விகளாக்கினாய்
நான் தொடங்க
நீ முடித்தாய்
உன் வாழ்க்கையை

மன்னித்து விடு
நான் சுயநலவாதி
வாழ்க்கையை
இழக்க- நான்
தயாராக இல்லை

கிடைத்த வாழ்க்கையில்
முழுமைக் காண்
“தனிமையோடு”
வரமாட்டேன் இனி
நான் உன்னோடு


நினைவு தூங்கிய
இரவுகளில்
நிஜமாய் தூங்காத
என் இதயம்
அல்லல்படுகின்றது
உன் நினைவால்
நித்தியம்.

நித்தம் உன்
நினைவுகளால்
தொலைந்த-என்
கனவுகளை
தேடிப்பார்க்கின்றேன்

எத்தனை இரவுகள்
உன் நினைவுகள்
என் கனவுகளை
கலைந்திருக்கின்றன

உன் கால் தடத்தில்
தலையணையிட்டு
என் காதலை பிரசவித்தேனே
அப்பொழுதாவது
புரியவில்லையா
என் காதல் நிஜமென்று.
நீ மௌனித்து
போகும்
ஓவ்வொரு கனமும்
நூன்
மரணித்தப் போகிறேன்

எத்தனை முறை
என் காதலை
உன் இதயச்
சிறையிலிட்டு
சித்திரவதை
செய்திருக்கிறாய்?

உறவுகளும்
உள்ளமும்
விடை கொடுக்க
முயன்றப்போது
உதட்டிற்கு
வேண்டாம் என்று
ஆணையிட்டாயே
அது ஏன்?

 நீ 
கொடுத்த
ரணங்கள்
என் இதழ்களின்
ஈரத்தை
உலர்த்தி விட்டன

கண்ட இடமெல்லாம்
காதலும்
கடைக்கண்ணில்
மட்டும் மோதலும்
கொண்டு- ஏன்
என்னை தூக்கிலிடுகிறாய்?

மனங்கள்
சந்தித்தப்போது
வார்த்தை இன்றி
மௌனித்தாயே
அது ஏன்?

காதலை கல்லாக்கவும்
மனதை புன்னாக்கவும்
முடிந்த விந்தையை
எங்கு சென்று
கற்றுக் கொண்டாய்?

இரவின் மடியில்
நிலவும்
நிலவின் மடியில்
நானும் தூங்க
நினைத்தப்போது
தடுத்தாயே
உறக்கத்திலும்
நிம்மதியை
கெடுத்த சதிகாரி

ஏய்
நீயும் ஒரு
கொலைக்காரி தான்
பிரசவிக்கும்
முன்பே-என்
காதலை
கலைத்து விட்டாயே!

உதட்டில்
சிரிப்பை வைத்து
ஏன்
உள்ளத்தில்
வி~த்தை வைத்தாய்?


சிகரட்டை
பிடிக்கம் போது
கூட- அது
உன் நினைவுகளை
அழித்து விடுமோ
என எத்தனை
தடவை – உன்
போலிக்காதலுக்காய்
கலங்கியிருப்பேன்?

உன்னை பிடிக்கிறது
என நான்
சொல்லவில்லை
உன்னைத் தவிர
வேறு எவளையும்
பிடிக்கவில்லை
என்கிறேன்

காதலை சுமந்தேன்
வலியைக்
கொடுத்தாய்
நினைவை சுமந்தேன்
நிம்மதியைக் கெடுத்தாய்


காதலுக்க களம்
அமைக்கும்
கண்கள்-உன்
ஓர விழிப்
பார்வையால்
என் ஓராயிரம்
இரவுகளை
ஓரங்கட்டியதே
அது ஏன்?

நீ
நடந்த பாதையெல்லாம்
உன்னை சுமந்த
என் நினைவுகளை
பதியம் போட்டிருக்கிறேன்
முளைப்பதற்கல்ல
இறப்பதற்காய்.

எத்தனை இரவுகள்
உன் நினைவுகளுக்காய்
என் இரவுகளை
சமர்ப்பித்திருக்கிறேன்
வழி இருந்ந போதும்
விழி இழந்து தவிக்கிறேன்

இருண்டு போன
என் இரவுகளுக்கு
ஒளி தந்தவள்
நீ…

நீயின்றிய என்
வாழ்க்கை
நரம்பற்ற வீணையடி
சுரமற்ற சுருதியை
யார் இரசிப்பது?

காத்திரமான
கதாநாயகனை
காதலின் மோதலில்
கோமாலியாக்கியது
ஏன்?

பொய்யான
உறவுக்கு
போலி உருவம்
காதலென்று
முட்டாள் தனத்தடன்
உன் நினைவுக்கு
பின்னாலும்
என்னுள்ளம்.
காதலெனு;னும்
கிண்ணத்தில்
மாது என்னும்
மதுவை ஊட்டி
போதைக்க
வழிகாட்டிய
இறைவன்
எங்ஙனம் பெரியவன்?

இருண்டு போன
என் வாழ்க்கையில்
இரு முறை உனை
நினைத்தப்போது
இவ் ஜென்மம்
ஒளியேற்றிக்
கொண்டதே
அது ஏன்?

இதயத்தை கல்லாக்கி
வாலிபத்தை பாலாக்கி
வண்ணத்துப் பூச்சியின்
சிறகை உடைத்தாயே
இதுவா உன்
காதலின் மனு தர்மம்?

உன் இதயத்தை
தூசு தட்டிப்பார்
எங்கோ ஓர்
மூலையில் - என்
மீதுள்ள உன்
பாசத்தலும்புகள்
மறைந்து கிடக்கும்.

நினைத்தவுடன்
மாற்றிக் கொள்வதற்கும்
விரும்பியதை
நினைப்பதற்கும்
காதலொன்றும்
விபச்சார விடுதியல்ல

உன்னிடத்தில்
சதை மோகம்
கொண்ட காதல்
துளிர்விட்டு மன
மோகம் கொண்ட
காதல் பட்டுப்
போயிற்று
அதுவும் இன்று
செத்துப்போயிற்று

நிலவு மறைந்து
புது முகம்
பெறலாம்- ஆனால்
என் நிஜமான
முகம் மறைந்து
உன் முகம் காட்டும்

நீ
பத்தினி என்று
சொல்ல முடியாது
ஏனெனில்
உன்னவனை தவிர
இன்னொருவனை
ஒரு நிமிடமாவது
நீ சீண்டியிருப்பாய்

உன் உடம்பில்
செயற்கை கண்களை
பொருத்திக் கொள்ளாதே
உண்மையான
கண்களில் மட்டும் தான்
ஈரமிருக்கிறது

 

நீ
எதை தேடினாய்
போலிக் காதலை
தவிர- உண்மைக்
காதலை பெற்று
முழுமையடைவதற்கு
நீ பக்குவமடையவில்லை

நான்
காதலில் தோற்றவன்
நீ
வாழ்க்கையை
தொலைத்தவள்

அழுகைக்குப் பின்
சிரிப்பை
அறிந்திருப்பாய
சிறிப்பிற்குப் பின்
அழுகையைப் பெற
வாழ்ந்துப் பார்
அர்த்தம் புரியும்

 நீ
காதலுக்கு ஏன்
இலக்கணம கற்பிக்க
முனைகிறாய்
உன் கடந்த
வாழ்க்கையை
மீட்டிப் பார்
வழு நிறைந்த
உன் வாழ்க்கையை
அது கூறும்

எவன் பூசிய
கறுமை
உன் வாழ்க்கையை
வெறுமையாக்கியது?

நீ
எவனோ செய்த
சூனியம்
அது தான்
இருட்டுக்குள்
கிடந்து
வெளிச்சத்தை
தேடுகிறாய்

என் காதலை
காட்டும்
தளவாடி என
நினைத்தேன்
தவறு
என்னுருவத்தில்
இன்னொருவனை
கண்ட களவாடி

காதலை நீ
எனக்கு
கற்றுக் கொடுக்கத்
தேவையில்லை
முதலில் நீ
தெரிந்துக்கொள்
எப்படி வாழ்வதென்று

ஒரு போதும்
உறங்காத விழிகள்
உயிரோடு பிணமான
வலிகள் புன்னகைக்கத்
தெரியாத பூவானாயே
இது தான் நீ
இறுதியில் தேடிய
வாழ்க்கை

                   ஆக்கம் :- பாபு சிங்கராயர்

 

 

Sri Lankan Time Now
 
WebCounter
 

Leadership
Geo Globe
 
இளைய நிலாவின் தூறல்
 
உலகம் ஒரு சுயநலவாதி மனிதன்
அதில் சூழ்நிலைக் கைதி
நம்பிக்கைகளை தோல்களில் சுமந்து
வெற்றியுடன் போராடுங்கள்.
மனித சக்திக்கு விஞ்சிய சக்தி
இவ்வுலகில் இது வரை அறியப்பட
வில்லை உலகை வெல்லப் பிறந்த இனம்
மனித இனம்.
 
Today, there have been 5 visitors (7 hits) on this page!
நன்றி மீண்டும் வருக This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free